Saturday, July 28, 2007

உதட்டுச் சாயம்

வானவில்லில் கடன் பெற்று
அவள் இதழ்களில் தீட்டிய வர்ணங்கள்...

பொறாமைத் தவம்

என்னவளின் கூந்தல் கண்டாள்
பொன்மயிலும் தவமிருக்கும்,
தோகையாக அவள் கூந்தல் வேண்டி !...

காதல் கொண்டேன்

பெண்ணே,

மழை இரசிக்கும்
உன் கண்கள் கண்டு,
மழையாய் பிறக்க ஆசை கொண்டேன்...

இசை விரும்பும்
உன் செவிகள் கண்டு,
இசையாய் பிறக்க ஆசை கொண்டேன்...

தேன் சுவைக்கும்
உன் நாவைக் கண்டு,
தேனாய் பிறக்க ஆசை கொண்டேன்...

குடை பிடிக்கும்
உன் கரங்கள் கண்டு,
குடையாய் பிறக்க ஆசை கொண்டேன்...

மணல் மிதிக்கும்
உன் பாதங்கள் கண்டு,
மணலாய் பிறக்க ஆசை கொண்டேன்...

எனை சுமக்கும்
உன் இதயம் கண்டு,
உன் மடிமேல் இறக்க ஆசை கொண்டேன்...

சிக்ஸர்


அன்பே,

உன்னை நோக்கி
நான் வீசிய காதல் பந்தை
விண்ணை நோக்கி நீ அடிக்க,
இரவில் 'நிலவாக',
பகலில் 'கதிராக'...

காதல் தோல்வி

காற்றிருக்கும் திசை நோக்கி
காற்றாடிப் பறப்பதனால்,
காதல் என்று அர்த்தமில்லை...

காதலிலே தோற்றவர்கள்
கல்லறைக்குப் போவதனால்,
காதல் என்றும் குற்றமில்லை...

காதலின் நிறம் சிவப்பு

காதலிக்க ஆளில்லை என்று நினைக்க,
என் கண்கள் சிவந்தன அன்று...

என் காதலை அவளிடம் சொல்ல,
என் கண்னங்கள் சிவந்தன இன்று...

தப்பித்தேன்

அன்பே,

உன்னை அழகு என்றேன்,
வெட்கப்பட்டாய்...

காதல் என்றேன்,
முத்தம் இட்டாய்...

திருமணம் என்றேன்,
'டாட்டா' என்றாய்...

வரம்

ஒற்றைக்காலில் தவமிருந்த பூவிற்கு வரம் கிடைத்தது,
என்னவள் கூந்தலில்...