Tuesday, September 9, 2008

வழுக்கை

கதிரவனின் முகம் கண்டால்
ஒளி வீசும் பாலைவனம்...

இலவசம்

கல்வியின் மடியில் சிறந்தவர்க்கு
பெயரும் புகழும் இலவசம்...

காதலின் பிடியில் விழுந்தவர்க்கு
கல்லறை மட்டும் இலவசம்...

Thursday, January 10, 2008

மறுக்காதே...

பெண்ணே,

காற்றும் ஒரு நாள் வீச மறக்கும் - நீ
என்னிடம் பேச மறுக்கையில்...

மலரும் ஒரு நாள் மனக்க மறக்கும் - நீ
என்னை மணக்க மறுக்கையில்...

தமிழன்

தமிழா!

சாதிக்கப் பிறந்தவன் நீ,
சாதியை ஒழிக்கப் பிறந்தவன் நீ...

பிறந்தவர்களுள் சிறந்தவன் நீ.
சிறந்தவர்களுள் உயர்ந்தவன் நீ...

தாயன்பு கொண்டவன் நீ - தமிழுக்கு
தாய்ப்பாலாய் விளங்குபவன் நீ...

பிறர்க்கு சான்றாய் இருப்பவன் நீ,
சான்றோனாய் இருப்பவன் நீ...

நட்பின் இலக்கணம் நீ,
நடப்பு சாம்பியன் நீ...