Sunday, December 12, 2010

கிறுக்கல்கள்

என் குட்டிச் செல்லம் வருகைக்கு
என் வீட்டுச் சுவரும் காத்திருக்கு,
நாள் முழுதும் நின்றபடி...

செல்லமே,
உன் பட்டுப் பிஞ்சுக் கைகளோடு
அதன் மேனியெங்கும் விளையாடு,
நாள் முழுதும் வரைந்தபடி...


- பாலா மாமா...
(என் அக்கா குழந்தைக்கு எழுதியது)

Saturday, October 16, 2010

பாலா'வின் நிறம் கருப்பு

என் நிறத்தைக் கண்டு பயமில்லை,
வரன் தேடும் வேளையில்
"போட்டோஷாப்" மட்டும் கையில் இருந்தால்...!

Friday, October 1, 2010

கடல்

ஆணவமில்லாதவளே,
ஆழத்தில் அமைதி காப்பவளே!

ஆசையில்லாதவளே,
ஆனந்த காற்றை தருபவளே!

உயிரில்லாதவளே,
உயிர்களை வாழ வைப்பவளே!

உறக்கமில்லாதவளே,
உரக்க ஒலி தருபவளே!

இரக்கமுடையவளே,
இயற்கையின் வரமே நீயன்றோ...!


-பதினோறாம் வகுப்பில் ஆசிரியர் கேட்டுக்கொண்டதன்படி எழுதியது.

Thursday, September 30, 2010

இதல்லவா சாதனை!

கின்னஸ் புத்தகத்தில் என் பெயர் எழுதுங்கள்
அவள் நினைவின்றி நான் வாழ்ந்த
ஒரு நொடி சாதனைக்காக...!

Wednesday, September 22, 2010

ஆசிரியர்

அழியாச் செல்வத்தைக் கற்பிக்கும் ஆசிரியரே,
நீர் ஓர் அழியாக் காவியமே...

அழியாக் காவியமே,
நீர் என் அறிவின் பிறப்பிடமே...

Saturday, August 7, 2010

ஆர்வம்

பொதுத் தேர்வின் முடிவுகள்,
பதட்டத்துடன் வரிசையில் நின்றேன்
பக்கம் நின்ற பருவப்பெண்
என்னை பார்க்க மாட்டாளோ!

அன்பு தந்தை

சாலையோர வீதியிலே
என்னவள் எனை கடந்து வர,
வெட்க மழையில் நான் நனைந்து
அச்சத்துடன் தலை குனிய,
அருகில் இருந்த என் அன்பு தந்தையோ
அவளை ஓரக்கண்ணால் பார்த்தபடி!